வனப்பகுதியில் மெய்மறந்து உல்லாசம்: பார்க்க கூடாததை பார்த்த கணவர்...கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்

மாதேஷுக்கும் நாகம்மாவுக்கும் தவறான கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.;

Update:2025-07-22 18:04 IST

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகே தொட்டமஞ்சி மலை கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 35) கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த மாதப்பன் மனைவி நாகம்மா (வயது 34) இவர்கள் இருவரும் கடந்த 15 நாட்களாக வீட்டை விட்டு வெளியெ சென்றவர்கள் காணவில்லை. இவர்களை அவர்களது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இது குறித்து இருவரது குடும்பத்தினரும் அஞ்செட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்தநிலையில் தொட்ட மஞ்சி கிராமத்தையொட்டி வனப்பகுதியில் அழுகிய நிலையில் மாதேஷின் உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர். இதனிடையே அதே வனப்பகுதியில் வேறு ஒரு பகுதியில் அழுகிய நிலையில் நாகம்மாவின் உடலை நேற்று போலீசார் மீட்டனர். பின்னர் இருவரத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பான விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

மாதேஷுக்கும் நாகம்மாவுக்கும் தவறான கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இவர்கள் இருவரும் வனப்பகுதியில் மெய்மறந்து உல்லாசமாக இருந்துள்ளனர். மனைவியை காணாமல் வனப்பகுதிக்கு தேடி வந்த மாதப்பன் நேரில் என்ன பார்க்ககூடாததோ அதை பார்த்துவிட்டார். தனது மனைவி நாகம்மாவை மாதப்பன் கண்டித்துள்ளார். இதனால் கோபித்துக்கொண்டு அவர் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அங்கிருந்து அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமாகி விட்டார். வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து வனப்பகுதியில் மரத்தில் சேலையில் மாதேஷ் மற்றும் நாகம்மா வெவ்வேறு இடங்களில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இருவரும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்களா? கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்