கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான டெய்லர் ராஜாவிடம் போலீசார் தீவிர விசாரணை

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான டெய்லர் ராஜாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-07-20 09:22 IST

கோவை,

கோவை ஆர்.எஸ்.புரம் உட்பட பல்வேறு இடங்களில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி அடுத்தடுத்து தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த வழக்கில் 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கோவையை சேர்ந்த சாதிக் என்ற டெய்லர் ராஜாவை கடந்த 9-ந் தேதி கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் கைது செய்தனர்.

பின்னர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவரை போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவர் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தனக்கு தொடர்பு இருப்பதாக குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீசார் கூறும்போது, டெய்லர் ராஜாவை கைது செய்த போது தனக்கும், கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை. முதல் மனைவிக்கு பயந்து தலைமறைவாக இருப்பதாக தெரிவித்தார். ஆனால் காவலில் எடுத்து விசாரித்த போது குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டார்.1998-ம் ஆண்டில் இருந்ததை விட கோவை நகரில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.

எனவே அவரை சம்பவ இடங்களுக்கு அழைத்து செல்வது மற்றும் தலைமறைவாக இருந்த கர்நாடகா மாநிலத்திற்கும் அழைத்து செல்வது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறோம். போலீஸ் காவல் முடிய இன்னும் 2 நாட்களே இருப்பதால் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்