நீலகிரி: அரசு பள்ளி விடுதியில் உணவு சாப்பிட்ட 30 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

பள்ளி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.;

Update:2025-07-17 15:11 IST

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூரில் சுபாஷ் சந்திரபோஸ் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பழங்குடி மாணவர்கள் உள்பட 90-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் குறிப்பாக 33-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். வழக்கம்போல மாணவர்கள் காலை விடுதியில் கொடுக்கப்பட்ட உணவை சாப்பிட்டனர்.

இந்த நிலையில் காலை உணவு சாப்பிட்ட சில குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக வாகனம் மூலமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளை கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தற்போது குழந்தைகளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்