தேசிய ஜனநாயக கூட்டணி பலமுடன் உள்ளது - தமிழிசை சவுந்தரராஜன்
தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறுமென தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.;
சென்னை,
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;
"அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் அமர்ந்து எத்தனை இடங்கள், அணியை முன்னெடுத்துச் செல்வது எப்படி என்பதையெல்லாம் முடிவு செய்வார்கள். தலைவர்களின் பேச்சுக்கு விளக்கம் கொடுப்பதற்கு நாங்கள் இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி பலம் பொருந்திய கூட்டணியாக இருக்கிறது. நிச்சயமாக அது பலமடையும். நிச்சயமாக அது வெற்றி பெறும்."
இவ்வாறு அவர் கூறினார்.