மு.க. முத்து மறைவு: முதல் அமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல்
முக முத்துவின் மறைவையொட்டி முக ஸ்டாலினை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல் கூறினார்.;
சென்னை,
முதல் அமைச்சர் முக ஸ்டாலினை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இன்று நேரில் சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சகோதரர் மு.க முத்து மறைவுக்கு சீமான் ஆறுதல் கூறினார்.
முன்னதாக நேற்று .முக.முத்து மறைவுக்கு, எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். அவரை இழந்துவாடும், அவரது குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஓ.பன்னீர்செல்வம்
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மு.க.முத்துவின் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்துக்கொண்டனர்.
இதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்தனர்.