பராமரிப்பு பணி: கோவை ரெயில்கள் பகுதியாக ரத்து

கண்ணூர்- கோவை விரைவு ரெயில் (வண்டி எண்16607), கண்ணூர்-பாலக்காடு இடையே மட்டுமே இயக்கப்படும்.;

Update:2025-07-20 02:50 IST

கோவை,

சேலம் ரெயில்வே கோட்டநிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக வருகிற 22-ந் தேதி கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் கண்ணூர்- கோவை விரைவு ரெயில் (வண்டி எண்16607), கண்ணூர்-பாலக்காடு இடையே மட்டுமே இயக்கப்படும். பாலக்காடு-கோவை இடையே அந்த ரெயில் இயக்கப்படாது.

அன்றைய தினம் மதுரையில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்படும் மதுரை-கோவை ரெயில் (எண்:- 16722) மதுரை -பொள்ளாச்சி இடையே மட்டுமே இயக்கப்படும். பொள்ளாச் சி -கோவை இடையே இயக்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்