மதுரை: ரெயிலில் ஜன்னல் ஓரம் பயணித்த பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

பெண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்துக்கொண்டு ஓடினார்.;

Update:2025-07-20 04:59 IST

மதுரை,

மும்பையில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு வாரம் 3 முறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. மும்பையில் இருந்து கடந்த 17-ந் தேதி நாகர்கோவில் புறப்பட்ட இந்த ரெயிலில் (வ.எண்.16339) சேலத்தில் இருந்து நெல்லைக்கு பயணிக்க ஒரு பெண் முன்பதிவு செய்திருந்தார். அதன்படி சேலம் ரெயில் நிலையத்தில் இருந்து எஸ்-2 பெட்டியில் பயணம் செய்து வந்தார். ஜன்னல் அருகே உள்ள இருக்கை அவருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.

இந்த ரெயில் நேற்று அதிகாலை 4.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தது. அந்த பெண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவர் கழுத்தில் அணிந்து இருந்த சுமார் 6 பவுன் தங்க சங்கிலியை திடீரென மர்மநபர் ஜன்னல் வழியாக கையை விட்டு பறித்துக்கொண்டு ஓடினார். அதனை தொடர்ந்து அப்பெண் கூச்சல் போடவே சக பயணிகள் உடனடியாக ரெயில் பெட்டிக்குள் இருந்த அனைத்து விளக்குகளையும் எரியவிட்டனர். பின்னர் அந்த நபரை தேடிப்பார்த்தபோது அவர் பிளாட்பாரத்தில் இல்லை. இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், மதுரை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை ரெயில் நிலையத்தில் பெண் பயணியிடம் நகை பறித்துவிட்டு ஓடிய கொள்ளையனை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags:    

மேலும் செய்திகள்