கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் தகனம்
கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் தகனம் செய்யப்பட்டது.;
சென்னை,
மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் மு.கருணாநிதி மற்றும் பத்மாவதி தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் மு.க. முத்து. கடந்த சில நாட்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், இன்று காலை 8 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 77.
மு.க.முத்து காலமானதையொட்டி அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டது. மு.க.முத்துவின் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இறுதி அஞ்சலி செலுத்திய தலைவர்களின் விவரம்:-
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவஹிருல்லா, மதிமுக செயலாளர் துரை வைகோ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி, சட்டமன்ற உறுப்பினர்கள் அசன் மௌலானா, முகமது ஷா நவாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், பாஜக துணைத் தலைவர் கரு. நாகராஜன், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சு. திருநாவுக்கரசர்;
முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, ராசாத்தி அம்மாள், தி இந்து குழும இயக்குநர் என். ராம், தினத்தந்தி குழும இயக்குநர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், , நக்கீரன் கோபால், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை ஜோ. அருண், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றத் தலைவர் வாகை சந்திரசேகர், கராத்தே தியாகராஜன், கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் சத்யராஜ், நடிகர் எஸ்.வி. சேகர், நல்லி குப்புசாமி;
மேலும், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், டிஜிபி சங்கர் ஜிவால், முதலமைச்சரின் செயலாளர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் / தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளர் மரு. ஆர். செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் ஜி.கே. வாசன் ஆகியோர் முதல்-அமைச்சரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மு.க.முத்துவின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து மு.க.முத்துவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. கோபாலபுரத்தில் இருந்து பெசன்ட் நகர் மின்மயானம் வரை நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதையடுத்து மின் மயானத்தில் வைத்து மு.க.முத்து உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மு.க.முத்துவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் மு.க.முத்துவின் உடல் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. கனத்த முகத்துடன் அண்ணனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரியாவிடை கொடுத்தார்.