கள்ளக்குறிச்சி: டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் - 4 பேர் பலி

திருக்கோவிலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2025-07-20 12:32 IST

கள்ளக்குறிச்சி,

திருக்கோவிலூர்-விழுப்புரம் நெடுஞ்சாலையில், கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் மணலூர்பேட்டை அருகே சென்றபோது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில், காரில் பயணித்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த ஆயுதப்படை உள்பட 5 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், படுகாயமடைந்த இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்