சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.;
சென்னை,
தெற்கு ஆந்திர மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்து வருகிறது. சென்னை சென்டிரல், எழும்பூர், சேத்துப்பட்டு, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி, சைதாபேட்டை, மெரினா, முகப்பேர், கோயம்பேடு, அண்ணாநகர், ஆவடி, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.