தேசிய மீன்பிடி டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்: மீனவர்களுக்கு அழைப்பு
தேசிய மீன்பிடி டிஜிட்டல் தளத்தில் மீனவ கிராம மக்கள் அனைவரும் பயனடையும் விதத்தில் பொது இ-சேவை மையத்தின் மூலம் இப்பதிவினை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;
தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் புஷ்ரா ஷப்னம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"பிரதம மந்திரி மத்சய கிஸான் சம்திரி சஹ் யோஜனா (PM-MKSSY) திட்டத்தின் கீழ் தேசிய மீன்வளத்துறை டிஜிட்டல் தளத்தில் (NFDP) மீனவர் மற்றும் மீனவ மகளிரை பதிவு செய்ய அறிவுறுத்தியும் இதுநாள் வரையிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் குறைவான அளவிலேயே பதிவு செய்துள்ளனர்.
மேலும் மீன்வளத்துறை மூலம் செயல்படுத்தப்படும் கடல் மீனவர் நலத்திட்டங்கள், மீனவர் விபத்து காப்புறுதி திட்டம், மீனவர் நலவாரியம் போன்ற திட்டங்களின் கீழ் அனைத்து நபர்களும் விடுபாடின்றி பயன்பெறுவதற்கும் NFDP பதிவுகள் என்பது அவசியமானது ஆகும். அவ்வாறு NFOP Portal-ல் பதிவு செய்யாத மீனவர்களை, மீனவர் விபத்து காப்புறுதி திட்டத்தின் கீழ் பரிந்துரை செய்ய இயலாது, எனவே மீனவ கிராம மக்கள் அனைவரும் பயனடையும் விதத்தில் பொது இ-சேவை மையத்தின் மூலம் இப்பதிவினை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.