சென்னையில் போதைப்பொருள் கடத்தல் - 3 பேர் கைது

சந்தேகத்தின்பேரில் அவர்களை சோதனை செய்த போது, மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.;

Update:2025-07-19 15:04 IST

சென்னை ,

சென்னை போலீசாருக்கு போதைப்பொருள் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நுங்கம்பாக்கம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் வள்ளுவர் கோட்டம், வாட்டர் டேங்க் அருகே சந்தேகப்படும் படியாக நின்றிருந்த 3 நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில் அவர்களை சோதனை செய்த போது, மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போதைப்பொருளை பற்முதல் செய்த போலீசார் திருநெல்வேலியை சேர்ந்த சூர்யபாரதி (28), சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த கண்ணன் (35), செம்மஞ்சேரி ராம்குமார் (40) ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்