762 மாணவர்களுக்கு தலா ரூ.10,000 கல்விக் கட்டணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 11 நபர்களுக்கு பணி நியமண ஆணைகளை முதல்-அமைச்சர் வழங்க உள்ளார்.;
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கொளத்தூர், ரெட் ஹில்ஸ் சாலை, எஸ். ஜெ. அவென்யூ, அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாளை (21.07.2025) திங்கட்கிழமை காலை 09.45 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.
இந்த விழாவில், அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 762 மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கட்டணம் ரூ.10,000/- மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகள் மற்றும் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்குப் பல்கலைக்கழக விதிமுறைகளின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 11 நபர்களுக்கும், கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஒரு நபருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.