அ.தி.மு.க. கூட்டணியில் இணைய இருக்கும் பிரமாண்ட கட்சி த.வெ.க.வா? முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
தி.மு.க.விற்கு மக்களை சந்திக்க பயம். தி.மு.க. ஆட்சியை மக்கள் நிராகரிப்பார்கள் என்று கடம்பூர் ராஜூ கூறினார்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்ச ரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6-ந் தேதி முதல் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.ஆளும் கட்சியான தி.மு.க. கூட்டணிக் கட்சிகளை நம்பி உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி மக்களை நம்பி உள்ளார். அவர் செல்கின்ற இடங்களில் மக்கள் கூடும் கூட்டமே ஆட்சி மாற்றத்திற் கான சாட்சியாக உள்ளது.அந்த வகையில் தூத்துக் குடி மாவட்டத்தில் வருகிற 31-ந்தேதி விளாத்திகுளத்தி லும், 1-ந் தேதி கோவில் பட்டியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் அதிகாரிகளை வைத்து தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறது. செய்தி தொடர்பாளர்கள் என்று 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. அரசியலுக்காக அரசு அதிகாரிகளை பயன்படுத்தும் போக்கினை கண்டித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதுவரை இதற்கு முதல்-அமைச்சர் பதிலளிக்கவில்லை. இது எதை காட்டுகிறது என்றால் தி.மு.க.வின் பயத்தை காட்டுகிறது. தி.மு.க.விற்கு மக்களை சந்திக்க பயம். தி.மு.க. ஆட்சியை மக்கள் நிராகரிப்பார்கள். அ.தி.மு.க.விற்கு மாபெரும் வெற்றியை தருவார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, பிரமாண்ட மான கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இணைய இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பது தமிழக வெற்றிக் கழகத் தையா? என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, இருக்கலாம், ஒத்த கருத்துடைய கட்சிகள் வரலாம் என்று ஏற்கனவே சொல்லி வருகிறோம் என கடம்பூர் ராஜூ பதில் அளித்தார்.