அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் எந்த வித குழப்பமும் இல்லை - அண்ணாமலை

திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கில் இருக்கும் போது குழப்பம் இல்லை என்று அண்ணாமலை கூறினார்.;

Update:2025-07-19 19:12 IST

சென்னை,

தமிழக பாஜக முன்னாள் தலைவரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான அண்ணாமலை இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருமாவளவன் மாநாட்டிற்கு அனுமதி கிடைக்கவில்லை. திமுக அரசை விமர்சித்துக்கொண்டே அந்த கூட்டணியில் திருமாவளவன் இருக்கிறார். அதுபோன்ற குழப்பம் எல்லாம் அதிமுக - பாஜக கூட்டணியில் இல்லை. 2026 ல் யார் தலைமையில் யார் தலைமையில் கூட்டணி, யார் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து இருக்கிறோம். இது 2026 க்கு பொருந்தும். எடப்பாடி பழனிசாமி , அமித்ஷா இணைந்து அறிவித்து இருக்கிறார்கள். திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கில் இருக்கும் போது குழப்பம் இல்லை" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்