அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,... ... கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நல குறைவால் காலமானார்
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மு.க. முத்துவின் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார். அதில், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த மு. கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் மு.க. முத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
Update: 2025-07-19 07:13 GMT