சென்னை, தமிழகத்தின் மறைந்த முன்னாள்... ... கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நல குறைவால் காலமானார்
சென்னை,
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் பத்மாவதி தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் மு.க. முத்து. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், இன்று காலை 8 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 77.
சென்னை ஈச்சம்பாக்கத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அணையா விளக்கு, பூக்காரி, பிள்ளையோ பிள்ளை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதில், பிள்ளையோ பிள்ளை படம் அவருடைய தந்தை கருணாநிதி கைவண்ணத்தில் உருவானது. கலைவாரிசாக மு.க. முத்துவை முன்னிறுத்த கருணாநிதி முயன்றார்.
ஒரு சில படங்களில் நடித்த அவர் பின்னர், பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை. அரசியல் பணிகளிலும் விருப்பம் இல்லாமல் ஒதுங்கி கொண்டார்.
அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் செல்கிறார். மு.க. முத்துவின் மறைவை அவருடைய மனைவி சிவகாம சுந்தரி இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.
இவருக்கு எம்.கே.எம். அறிவுநிதி என்றொரு மகன் இருக்கிறார். இதனையடுத்து, தி.மு.க.வில் இன்று முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அவருடைய மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.